பாம் ஜூமிராவில் உள்ள சொகுசு கட்டிடத்தை யார் வாங்கியது என்ற கேள்விக்கு விடை கசிந்திருக்கிறது. 80மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்த சொகுசு கட்டிடத்தை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்துக்காக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் 10படுக்கை அறைகள், ஸ்பா, உள்ளே, வெளியே என நீச்சல் குளங்கள் உள்ளன . ஆனந்த அம்பானிக்கு வாங்கப்பட்ட வீட்டுக்கு பக்கத்திலேயே ஷாருக்கான், டேவிட் பெக்காம் இன் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு 79மில்லியன் டாலர் மதிப்பில் பிரிட்டனில் அம்பானி தனது மூத்த மகன் ஆகாஷுக்கு பிரமாண்ட மேன்சன் வாங்கி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.