வெளிநாட்டு பணம் கையிறுப்பு இல்லாமல் தடுமாறி வரும் பாகிஸ்தானில் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு மத்திய வங்கி கடன்களின் மீதான வட்டி விகிதத்தை 21விழுக்காடாக உயர்த்தியுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமானால் 100 அடிப்படை புள்ளிகள் கடன்கள் மீது உயர்த்தப்பட்டுள்ளன. அந்த நாட்டில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக உள்ளனர்.அந்த நாட்டில் ரம்ஜான் நோன்பு எடுக்கும் நிகழ்ச்சிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால் கடும் பொருளாதார சிக்கல்களால் உணவுப்பொருட்கள் விலை விண்ணை முட்டியுள்ளன. உணவு,போக்குவரத்து செலவுகள் கிட்டத்தட்ட 45விழுக்காடு வரை உயர்ந்துள்ளன. அந்த நாட்டு பணத்தின் மதிப்பும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தான் அரசு உணவு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சிகளின்போது மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்த அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக உள்ளது. அடுத்த 8 காலாண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும் அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒர அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 287.9 ரூபாயாக உள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்து பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சுமார் 20 விழுக்காடு வரை சரிந்துள்ளது. 2019ம் ஆண்டே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கேட்ட பாகிஸ்தான், தற்போது அதில் இருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் தேவை என்று மீண்டும் ஐஎம்எஃப்பை நாடியுள்ளது.
பங்காளி நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு சிக்கல்!!!
Date: