ஏடிஎம் கட்டணம் மீண்டும் உயர்வு! எப்போது அமலுக்கு வருகிறது? கூடுதலாக எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்?

Date:

வேறு வங்கிகளின் ஏடிஎம்-களில், டெபிட் கார்டைப் பயன்படுத்தும்போது, உங்கள் வங்கி ஒரு பரிமாற்றக் கட்டணத்தை (interchange fee) அந்த ஏடிஎம் -ஐ வைத்திருக்கும் வங்கிக்கு வழங்க வேண்டும். இந்த கட்டணம் வாடிக்கையாளரான உங்களிடம் இருந்து பெறப்படும். இந்த கட்டணம் ஆகஸ்ட் 1 முதல் திருத்தி அமைக்கப்படுகிறது. . முன்னதாக, மற்றொரு வங்கியின் ஏடிஎம் – ஐப் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறைக்கும் ₹15 வசூலிக்கப்பட்டது, இப்போது ஆகஸ்ட் 1 க்குப் பிறகு, கட்டணம் ₹17 ஆக இருக்கும். வங்கிக் கணக்கில்   எவ்வளவு பணம்  இருக்கிறது, “பின்” நம்பர் மாற்றுவது போன்ற சேவைகளுக்கு ₹6 பெறப்படும்; முன்னதாக, இது ₹5 ஆக இருந்தது.

இப்போதைய நிலவரப்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி ஏடிஎம் – களை ஒவ்வொரு மாதமும் ஐந்து முறை இலவசமாக பயன்படுத்தலாம். மற்ற வங்கிகளில், மெட்ரோ சிட்டிகளில் (metro) மூன்று முறையும் நான் – மெட்ரோ (non-metro) சிட்டிகளில் ஐந்து முறையும் பயன்படுத்தலாம். “ஏடிஎம்களின் பராமரிப்பு சம்மந்தமாக ஏற்படும் செலவுகளை கணக்கில் கொண்டு இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன”  என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதிகபட்சமாக ஒரு வங்கி ₹20 வாங்கலாம். இதுவும் ஜனவரி, 1, 2022, முதல் ₹21 மாற போகிறது.

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இப்பொழுது SBI என்ன சொல்கிறது என்றால், என்றால், நீங்கள் Branch-க்கு போறீங்களோ இல்லை ATM-லேயே  உங்க வேலையை முடிச்சிக்கிறீங்களோ, மொத்தமா 5 transactions வரைக்கும் தான் உங்களுக்குக் கட்டணம் இல்லை. அதற்கு மேல், ₹15  + 18 % GST உங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். அது சுமாரா ₹18 வரும். Tier 2, 3, 4 cities-ல இருக்கறவங்களுக்கு இது சிரமம் கொடுக்கும். வங்கிகள் இவ்வாறு செய்வதால் middle class, lower middle class மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதப் பத்தி முன்னதாகவே நம்ம பேசியிருக்கோம் எப்படி வங்கிகள் minimum balance requirement வச்சு  ₹2,000 கோடி சம்பாதிச்சாங்கன்னு. நீங்க அவங்க கிட்ட savings account வைத்திருந்தால், ₹1,000-க்கு 3% வட்டி கிடைக்கும். அதாவது ஓராண்டுக்கு பிறகு, ₹1030 ஆக உங்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை நீங்க வெளி market-இல் கொடுத்தால், உங்களுக்கு ₹1,100 வரும்.

UPI government டைம்ல இருந்த no balance account, Jan Dhan account-ஆக மாறியது. பணமதிப்பிழப்பு (demonization) வந்த பிறகு, 5 தடவ தான் கட்டணம் இல்லாமல் transactions பண்ண முடியும் என்றாகியது. Ease of banking-கிறது எங்க போச்சு? பணக்காரங்களுக்கு பிரச்சனையே இல்ல. அவங்களால minimum balance வச்சுக்க முடியும். நான் முன்னாடியே சொல்லியிருந்தேன், ₹40,000 இல்லாம குடும்பம் நடத்தறது கஷ்டம். Middle class-ஐ credit card, cheque bounce charges-னு போட்டு வாட்டுறாங்க,. பணக்காரங்களோட கடன்கள் கணிசமாக தள்ளுபடி செய்யப்படுகின்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...