பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் மறைவு..

Date:

பஜாஜ் குழுமங்களின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ராகுல் பஜாஜ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.

1938-ம் ஆண்டு ஜுலை மாதம் 10-ம்  தேதி பிறந்த ராகுல் பஜாஜ், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றி பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். மேலும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக, 1968-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ராகுல் பஜாஜ், பத்மபூஷன் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். மாநிலங்களவை எம்.பி.யாகவும் அவர் இருந்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஜாஜ் ஆட்டோ குழுமங்களின் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் பஜாஜ் பொறுப்புகளில்லாத தலைவராக செயல்பட்டு வந்தார்.

இருதயம், நுரையீரல் பிரச்சினைகள் காரணமாக மும்பையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், வயது மற்றும் உடல்நல கோளாறுகள் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...