கிரிப்டோ கரன்சிகள் மிகவும் மோசமானவை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோவுக்கு Tax:
மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், கிரிப்டோ கரன்சிகள் மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கிரிப்டோ கரன்சி பொருளற்றது:
இந்நிலையில், கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் மெய்நிகர் பணம் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அவை பணம் போன்றவையும் அல்ல. அதற்கென உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சி என்பது, Ponzi Scheme என்ற திட்டத்தை விடவும், மோசமானதாக இருக்கலாம். மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என்பதை நிராகரித்துள்ள ரபி சங்கர், அவை முற்றிலும் தடை செய்யப்படுவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், கடந்த வாரம் இதேபோன்று கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.