இந்தியாவில் தங்கம் சுத்தமான தங்கமா,என்பதை உறுதி செய்யும் அமைப்புகளாக ,BIS, Hallmark உள்ளிட்டவை உள்ளன. இந்த நிலையில் ஹால்மார்கின் 6 இலக்க தனித்துவ குறியீட்டை ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து மத்திய அரசு கட்டாயமாக்குகிறது. மார்ச் 31ம் தேதிக்கு பிறகு எந்த நகைக்கடையும் இந்த 6 இலக்க நம்பர் இல்லாமல் தங்கத்தை விற்க முடியாது. HUID என்கிற தனித்துவ முத்திரை ஒவ்வொரு துளி தங்கத்திலும் இருக்கவேண்டும் என்றும் விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் போலி நகைகளை வாங்கி ஏமாறக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. நாடு முழுக்க 940 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. இதில் முதல்கட்டமாக பழைய நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை மாற்ற 256 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த குறியீடு இல்லாமல் தங்கம் விற்கும் நகைக்கடைகளுக்கு நகையின் மதிப்பைவிட 5 மடங்கு அபராதமாக விதிக்கப்பட இருக்கிறது. புதிய ஹால்மார்க் குறியீடு பெற்ற தங்கமாக இருந்தால் அது அதிக விலைக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கம் வாங்கும் போது உஷார்… உஷார் உஷார்…
Date: