செக் பேமெண்ட்ஸ் பண்றீங்களா? அப்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய தருணம் வந்தாச்சு. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகஸ்ட் 1 ல இருந்து வங்கி விதிமுறையில் மாற்றங்கள் கொண்டு வராங்க. இனிமேல, National Automated Clearing House (NACH) ஒவ்வொரு நாளும், 24 மணி நேரமும் இயங்கும்.
இப்ப எதுக்காக எந்நேரமும் எச்சரிக்கையா இருக்கணும்னு சொல்றாங்க? இந்த மாசத்திலுருந்து, NACH எல்லா நாட்கள்ளயும் இயங்கும், விடுமுறையும் சேர்த்து. காசோலை கொடுக்கறதுக்கு முன்னாடி, உங்க அக்கவுண்ட்ல போதுமான பேலன்ஸ் இருக்கானு பார்த்துக்கோங்க. ஏன்னா, போதுமான பேலன்ஸ் இல்லைன்னா, உங்க காசோலை பவுன்ஸ் ஆக வாய்ப்புண்டு. பவுன்ஸ் ஆகுறதுனால, உங்களுக்கு அபராதம் போட வாய்ப்புண்டு.
இந்த வருடம், ஜனவரியிலிருந்து, RBI ஒரு புது சிஸ்டமை கொண்டு வந்தாங்க. அதன் படி, ₹50,000 மேல பரிவர்த்தனை செய்தால், சிஸ்டேமே முக்கியமா விவரங்களை உங்களை மற்றோரு முறை சரி பார்க்கத் தூண்டும். இதை அவர்கள், பாசிட்டிவ் பே சிஸ்டம் (Positive Pay System) என்று அழைக்கிறார்கள்.
இதன் படி, ஒரு காசோலை வழங்கும் நபர், அந்த காசோலையின் எண், தொகை, யார் பெயருக்கு செக் கொடுக்கிறீர்கள் மற்றும் இதர விவரங்களை உங்கள் கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்க முடியும். உங்களின் செக் வரலாற்றை உங்களால் காண முடியும். பிற்காலத்தில், காசோலை அளிக்கும் போது, இந்த விவரங்கள் உங்களுக்கு உதவும்.