நமக்கு வயதாகும்போது நம் வாழ்க்கை எவ்வாறு உயர்கிறதோ, அதேபோன்று நம் பொறுப்பும் அதிகரிக்க தொடங்குகிறது. ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்விற்கு பிறகு, குடும்பத்திற்கு நிதி சுமை ஏற்படாமல் காப்பாற்றுவது மிக முக்கியம்.
டேர்ம் காப்பீடு மற்றும் முழு காப்பீடு இந்த இரண்டுமே காப்பீடு எடுத்தவரின் இறப்பிற்குப் பிறகு, பயனாளர்களுக்கு பணரீதியாக உதவக்கூடிய திட்டங்களாக இருக்கிறது. ஒரு ஆயுள் காப்பீடு எடுப்பதற்கு நாம் செய்யும் செலவு, நிரந்தர காப்பீடு எடுப்பதற்கு நாம் செய்யும் செலவிடும் ஒப்பிடும் போது, மிகவும் குறைவானது. ஆயுள் காப்பீட்டை பொருத்தவரை, ஒருவரின் இறப்பிற்குப் பிறகு, அவருடைய குடும்பத்திற்கு நிதி சுமை ஏற்படாமல் தடுப்பதற்கான ஒரு திட்டம் மட்டுமே ஆகும்.
ஆயுள் காப்பீட்டை பொருத்தவரை, ஒருவர் 85 வயது வரை காப்பீடு பெற முடியும். இந்தியாவில் இருப்பவர்களுடைய ஆயுட்காலம் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதன் அடிப்படையில், ஒருவர் 85 வயது வரை தனக்குத் தேவையான ஆயுள் காப்பீட்டை எடுப்பது சிறப்பாக இருக்கும். ஆயுள் காப்பீட்டிற்கு நாம் செலுத்தும் பிரீமியம் தொகை, காப்பீடு எடுப்பவரின் வயதை ஒத்ததாக இருக்கும். அதாவது, ஒருவர் குறைந்த வயதில் தன்னுடைய முதல் பிரீமியத்தை செலுத்தி இருந்தால், அவர் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை குறைவாகவே இருக்கும். எனவே ஆயுள் காப்பீட்டை பொருத்தவரை எவ்வளவு இள வயதில் எடுக்கிறோமோ அந்த அளவிற்கு பிரீமியம் தொகை குறையும். ஒருவர், தனக்கு எவ்வளவு ஆண்டுக்கு இந்த காப்பீடு வேண்டும் என்பதை காப்பீடு எடுப்பவரே முடிவு செய்து கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டை பொருத்தவரை, அதற்கான ப்ரீமியம் தொகையை ஒரே தவணையாகவோ அல்லது காப்பீடு எடுப்பவரின் விருப்பத்திற்கு தகுந்தவாரோ செலுத்த முடியும். பொதுவாக ஆயுள் காப்பீடு எடுக்கும் பொழுது வருமான வரி விலக்கு கிடைக்கும். அதாவது, ஆயுள் காப்பீடு எடுப்பதற்கு செலுத்தப்படக்கூடிய பிரீமியம் தொகையை, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது 80c- இன் கீழ் காண்பித்து, அதற்கு வருமான வரி விலக்கு பெற முடியும். ஆயுள் காப்பீடு பெறுவதற்கும் இது குறித்த மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
+91 91500 87647