இந்திய பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.முன்தினத்தை விட 402 புள்ளிகள் மும்பை பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 18ஆயிரத்து 608 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. உலகளவில் நிலவிய சாதக சூழல்,இந்திய நிதிநிலை குறித்த மக்களின் சாதகமான சூழலும் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வும் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைக்க அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுவதால் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்தஸ்இந்த் வங்கி,பஜாஜ் பைனான்ஸ் ,எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை நல்ல வருவாய் ஈட்டியுள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 1 விழுக்காடு உயர்ந்துள்ளது.மொத்தம் 150க்கும் அதிகமான பங்குகள் இந்தாண்டின் அதிகபட்ச உச்சத்தை தொட்டுள்ளன.