பெருந்தொற்றின்போது ஏர்இந்தியாவில் ஏராளமானோர் டிக்கெட் புக் செய்திருந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் புக் செய்த அமெரிக்கர்களுக்கு அவர்கள் கட்டிய பணமாக 121.5 மில்லியன் டாலரும் கால தாமதத்துக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையும் தரவேண்டும் என்று அமெரிக்கா புதிய உத்தரவை போட்டுள்ளது . அமெரிக்காவின் விதிகளின்படி விமான சேவையை எடுக்கும் பயணிகளுக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் பணம் அளிக்கப்பட வேண்டும். ஆனால் அதனை ஏர் இந்தியா மீறிவிட்டதாகவும் அந்நாட்டு அரசு புகார் தெரிவித்துள்ளது. டாடா தற்போது நிர்வகிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமின்றி போர்ச்சுகல்,மெக்சிகோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 600 மில்லியன் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஓராண்டில் அமெரிக்க அரசு மற்றும் விமான போக்குவரத்துத்துறை விதிக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகும் ஏர் இந்தியாவை மத்திய அரசு நிர்வகித்து வந்தபோது முன்பதிவு செய்யப்பட்டபோது பெறப்பட்ட தொகையை இதுவரை திரும்ப அளிக்கவில்லை என்று பெறப்பட்ட புகார்கள் காரணமாக இந்த நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்துள்ளது.
இந்த கம்பெனியை வாங்கினது ஒரு குத்தமா!!!!
Date: