2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் மெய்நிகர் பணம் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அவை பணம் போன்றவையும் அல்ல. அதற்கென உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.