இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,548.76 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 160.57 புள்ளிகள் அதிகரித்து 59,343.79 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55.70 புள்ளிகள் அதிகரித்து 17,681.40 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 129.35 புள்ளிகள் அதிகரித்து 36,551.25 ஆக வர்த்தகமானது.
ஆயுள் காப்பீடு செய்யப் போகிறீர்களா? ஏற்கனவே செய்திருக்கிறீர்களா? அதில் இருக்கும் நுட்பமான பல விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள், விழிப்போடு இருங்கள், இல்லையென்றால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களை ஏமாற்றக் கூடும், பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கும் உகன் பஸ்வானுக்கும் இடையிலான இந்த வழக்கை படித்துப் பாருங்கள், ஆட்டோ கவர் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக் காலத்தை விட 10 நாட்கள் கூடுதலாக இருப்பதாகவும் நிர்வாக இயக்குநர் ஆங்ஷு மல்லிக் கூறினார்.