மும்பை பங்குச் சந்தையில், ஃபெடரல் வங்கி தாக்கல் செய்துள்ள தகவலின்படி, 2020 டிசம்பரில் 2.71 சதவீதமாக இருந்த மொத்த செயல்படாத சொத்துக்கள் (NPAs) 2021 டிசம்பரில் 3.06 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சமீபத்திய நிதி திரட்டல், இன்ஸ்டாமார்ட்டில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், அதன் முக்கியத் தளமான உணவு விநியோகப் பிரிவில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இந்த டெபிட் கார்டு மற்ற டெபிட் கார்டுகளைப் போலவே ஆன்லைன் & ஆஃப்லைன் கட்டணங்களுக்கும் வேலை செய்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்ரோ கார்டாகவும், பஸ் கார்டு - ஆல் இன் ஒன் கார்டாகவும் வேலை செய்கிறது. ஏற்கனவே டெபிட் கார்டு டெல்லியில் பயணத்திற்கான மெட்ரோ கார்டாகவும், கோவாவில் பேருந்து அட்டையாகவும் செயல்படுகிறது.
Paytm-க்கு காப்பீட்டு உரிமத்தை வழங்குவதில்லை என்ற இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய முடிவு, fintech நிறுவனம் வங்கி உரிமம் பெறுவதற்கான வாய்ப்புகளை பாதிக்கலாம்.