Finance

OYO பங்குச்சந்தைகளில் பட்டியலிட கொள்கையளவில் ஒப்புதல் – பூர்வாங்க ஆவணங்கள் தாக்கல்..!!

78,430 கோடி ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலுக்கான (IPO) பூர்வாங்க ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.  7,000 கோடி வரையிலான பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் 1,430 கோடி வரையிலான விற்பனைக்கான சலுகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) யில் தனது வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்தது.

மாருதி சுசூகியின் நிகர லாபம் – ரூ.1,011 கோடி

மாருதி சுசுகியின் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 8.7 சதவீதமாக இருந்த லாப வரம்பு 4.6 சதவீதமாக இருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் அதன் முடிவுகள் ஒப்பிடத்தக்கதாக இல்லை என்று நிறுவனம் வலியுறுத்தியது, மின்னணு கூறுகள் பற்றாக்குறை காரணமாக நிறுவனத்தின் செயல்திறன் பாதிக்கப்பட்டது எனவும் நிறுவனம் கூறியது.

ஆக்சிஸ் வங்கி குறித்த எஸ்&பியின் தரச்சான்று – “நேர்மறை”

நேர்மறையான கண்ணோட்டம் ஆக்சிஸ் வங்கியின் சொத்து தர அளவீடுகள் அடுத்த 12-18 மாதங்களில் அதிக மதிப்பிடப்பட்ட இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணக்கமாக இருப்பதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

பட்ஜெட் 2022 : பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 14 துறை சார்ந்த மாற்றங்கள் !

இந்த ஆண்டு முக்கிய பொருளாதாரங்களில் மிக விரைவான வேகத்தில் மீண்டு வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் கோவிட் பரவல் போன்றவை அவரது பட்ஜெட் பணியை சவாலானதாக ஆக்குகின்றன. சீதாராமனின் பட்ஜெட்டில் பொருளாதார வல்லுநர்கள், நிறுவனங்கள், வரி வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் சம்பளம் பெறுபவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது

ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்டின் காலாண்டு முடிவுகள் – வியாழக்கிழமை வெளியாகிறது

ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Popular

Subscribe

spot_imgspot_img