Finance

வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை இந்தியா எட்டும் – மத்திய அமைச்சர் ஃபியூஷ் கோயல் தகவல்

நடப்பு ஆண்டில், வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை எட்டும் பாதையில் இந்தியா செல்வதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது குறைவான இருந்தாலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிபிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் (NRI) இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. NRI களுக்கு தனிநபர் நிறுவனங்களை (OPCs) அமைப்பதற்கான அனுமதியானது அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கியது. மலிவு விலை வீடுகளுக்கான வரிச் சலுகைகளும் நீட்டிக்கப்பட்டது. பல நாடுகளால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியது, இது NRI கள் திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

உங்களிடம் என்ன இன்சூரன்ஸ் இருக்கிறது? யார் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு இது தேவைப்படாது.

இன்போசிஸ் Q3-FY22 முடிவுகள் !

இன்போசிஸ் பங்குகள் வியாழக்கிழமை தொடக்க அமர்வில் மும்பை பங்குச் சந்தையில் 1% உயர்ந்து ₹1,898 ஆக வர்த்தகமானது, தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனமான இன்போசிஸ் அதன் வருவாய் வரம்புகளை உயர்த்தி இருக்கிறது, 2022 மார்ச் இறுதி நிதியாண்டில் 19.5% - 20% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்க்கிறது, முந்தைய காலாண்டின் 16.5% - 17.5% உடன் ஒப்பிடுகையில், அதன் ஆப்பரேசஷனல் லாப வரம்பைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹5,197 ஆக இருந்த Q3-FI22 இல் 12% ஒருங்கிணைந்த நிகர இலாபமாக ₹5,809 கோடி அளவை எட்டியிருக்கிறது, அதன் வருவாய் 23% உயர்ந்து ₹31,867 கோடியாக உயர்ந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் வங்கிகளின் பங்கு மதிப்பு அதிகமாகும் – நிபுணர்கள் கணிப்பு !

டிசம்பர் காலாண்டில் வசூல் மற்றும் சொத்துத் தரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, வணிக வளர்ச்சியிலும் வங்கிகள் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட...

Popular

Subscribe

spot_imgspot_img