செய்தி

பேட்டரி கார்கள் உற்பத்தி.. ரூ.10,445 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசுகி..!!

வரும் 2026-ம் ஆண்டுக்குள், குஜராத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை உள்நாட்டில் தயாரிக்க ரூ.10,445 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டீசல் மொத்த கொள்முதல் விலை அதிகரிப்பு.. சில்லறை கடைகளை நாடும் விற்பனையாளர்கள்..!!

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்த போதிலும், இந்திய அரசு, நவம்பர் 4 முதல் சில்லறை விலைகளை உயர்த்தவில்லை, ஆனால் அவர்கள் தொழில்துறை அல்லது மொத்த வாடிக்கையாளர்களுக்கான நேரடி விற்பனையின் விலைகளை தொடர்ந்து உயர்த்தியுள்ளனர்.

கனிம உற்பத்தி உயர்வு.. ஜனவரியில் 14.2% அதிகரிப்பு..!!

இதுகுறித்து இந்திய சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கம் மற்றும் குவாரிகள் துறைக்கான கனிம உற்பத்தி குறியீடு நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் 124.7-ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 2.8% அதிகம். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரையிலான 10 மாதத்தில், ஒட்டுமொத்தமான கனிமங்களின் உற்பத்தி 14.2% அளவுக்கு அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு முக்கியத்துவம் .. Britannia அறிவிப்பு..!!

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி (CMO) அமித் தோஷி கூறுகையில், நிறுவனத்தின் பணியாளர்களில் 38 சதவீதம் பேர் பெண்கள். கவுகாத்தி தொழிற்சாலையில், பெண்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது, அது 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்றார்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை.. Jet Aiways தகவல்..!!

இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக ஜெட் ஏர்வேய்ஸின் தாய் நிறுவனமாக கல்ராக் கேபிடல் முராரி லால் ஜலான் கன்சார்டியம் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

Subscribe

spot_imgspot_img