YES வங்கியானது டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, நிகர முன்பணம் (Net Advance) கிட்டத்தட்ட 4 சதவீதம் அதிகரித்து, தற்காலிக அடிப்படையில் ரூ.1,76,422 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி நிகர முன்பணம் ரூ. 1,69,721 கோடியாக இருந்தது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,920.60 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 174.26 புள்ளிகள் அதிகரித்து 59,776.10 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 51.69 புள்ளிகள் அதிகரித்து 17,797.60 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 176.80 புள்ளிகள் அதிகரித்து 37,490.25 ஆகவும் வர்த்தகமானது.
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
உலகின் மிகப்பெரிய பணக்கார கோடீஸ்வரர்களில் ஒருவரான சீ லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஃபாரெஸ்ட் லீ, அக்டோபர் 19 அன்று நிறுவனத்தின் அமெரிக்க டெபாசிட்டரி ரசீதுகள் உச்சத்தை எட்டியதில் இருந்து $10 பில்லியன் செல்வத்தை இழந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி பலத்த போட்டி மற்றும் பரவலான லாப இழப்புக்குப் பிறகு, செவ்வாயன்று டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் கேமிங் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனத்தில் தனது பங்குகளை குறைத்ததன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் அதன் மோசமான சரிவுக்கு இட்டுச் சென்றது.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ரூ.1,069.4 கோடி. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின் அடிப்படையில் இது 111.3 % வளர்ச்சி. சென்ற காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.2 % குறைவு. நிகர ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் வட்டி வருமானம் ரூ.7,240.30 அதாவது 12.9 % குறையக்கூடும், ப்ரீ ப்ரொவிஷன் ஆப்பரேட்டிங் லாபமானது 20.1 % குறைந்து Rs.5,106.50 கோடியாக இருக்கும்.