செய்தி

04/01/2022 – 60,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,548.76 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 160.57 புள்ளிகள் அதிகரித்து 59,343.79 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55.70 புள்ளிகள் அதிகரித்து 17,681.40 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 129.35 புள்ளிகள் அதிகரித்து 36,551.25 ஆக வர்த்தகமானது.

உணவுப் பொருட்களை சேமிக்கும் விற்பனையாளர்கள் ! கோவிட் 3 ஆம் அலை அச்சம் !

அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக் காலத்தை விட 10 நாட்கள் கூடுதலாக இருப்பதாகவும் நிர்வாக இயக்குநர் ஆங்ஷு மல்லிக் கூறினார்.

03-01-2022 (திங்கட்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹ 4,550 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹ 4,964 ஆகவும்

03/01/2022 – உயரும் சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

இன்று காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 58,711.81 புள்ளிகளில் வர்த்தகமானது.

40 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ! மோசடிகளைத் தடுக்க ஜனவரி 1 முதல் தீவிர நடவடிக்கை !

இந்த ஒரு வருடத்தில் மட்டும் பெரும்பாலும் போலியான இன்வாய்ஸ்கள் மற்றும் மோசடி உள்ளீட்டு வரிக் கடன் கோரிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை வரி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது போன்ற மோசடிகளைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகள் ஜனவரி 1 முதல் தொடங்கப்பட உள்ளன என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். நவம்பர் 9, 2020 முதல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், இயக்குநரகம் மூலம் இதனை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் மற்றும் பல்வேறு மத்திய ஜிஎஸ்டி அமைப்புகளின் மூலம் சுமார் 40,000 கோடி ரூபாய் தொடர்புடைய 5,700 க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.

Popular

Subscribe

spot_imgspot_img