உக்ரைன் மீது ரஷ்யா போர் செய்து வருவதால் இரண்டு ஆலைகளிலும் நியான் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் சிப் தயாரிப்பு பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Paytm Payment வங்கி வரும் ஜுன் மாதத்தில், சிறிய நிதி வங்கியை தொடங்குவதற்கான அனுமதி கேட்டு இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வரை, பாரத்பே இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. Sequoia Capital, Tiger Global Management, Ribbit Capital, Coatue Management மற்றும் Beenext உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் சுற்றுகள் மூலம் புது தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தை குரோவர் வழிநடத்தினார். இப்போது, குரோவரின் செல்வாக்கு குறைந்து விட்டதாகத் தெரிகிறது.
Microsoft என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். நுகர்வோர் மின்னணுவியல், கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் தயாரிப்பு மற்றும் கணினி தொடர்பான சேவைகளை உற்பத்தி செய்து வருகிறது.
சந்தை துஷ்பிரயோகத்தைத் தடுக்க, பரிவர்த்தனைகளை கையாளுதல் நடைமுறைகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக NSE எனப்படும் தேசிய பங்குச் சந்தை அமைப்பு தெரிவித்துள்ளது.