Reliance Industries நிறுவனரான முகேஷ் அம்பானி தான் வாங்கியுள்ள Rolls Royce Cullinan காரை அண்மையில் தெற்கு மும்பையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்தோனேஷியாவில், Yamaha Aerox 2022 மாடல் Scooter அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆறு புதிய வண்ணங்களுடன் 2022 மாடல் சந்தைக்கு வரவிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளுக்கு அமெரிக்க சந்தைக்காக உருவாக்கப்பட்ட சுவாசக் குழாய்களை பணமாக்க திட்டமிட்டுள்ளதாக Lupin-ன் தலைமை நிர்வாக அதிகாரி வினிதா குப்தா தெரிவித்துள்ளார்.
காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.
"4G ஸ்பெக்ட்ரம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் BSNL-ன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான மூலதன உட்செலுத்தலுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.