ரிலையன்ஸ் குழுமம் தனது 45வது ஆண்டு பொதுக்குழுவை நேற்று கூட்டியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அதிலும் முக்கியமாக சென்னை உள்ளிட்ட 4நகரங்களில் 5ஜி சேவை வரும் தீபாவளி முதல் கிடைக்கும் என கூறியுள்ளார்.
மேலும் கூகுள் உடன் இணைந்து அதிநவீன 5 ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். எனினும் அவர் அந்த செல்போனின் பெயர் வெளியிடவில்லை. அந்த போனுக்கு ஜியோ போன் 5g ஆக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த போனில் குவால்காம் 480 5g உள்ளது. இந்த போனில் பிரகதி os மற்றும் 5,000mah பேட்டரி, 6.5″ தொடுதிரை, 4ஜிபி ரேம் இருக்கும் என்றும் type c சார்ஜர் வசதியும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.