வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 361 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 628 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112 புள்ளிகள் சரிந்து 16ஆயிரத்து988புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தைகள் மொத்த மதிப்பில் அரை விழுக்காடு சரிவுடன்தான் பங்கு விற்பனையை இந்த வாரம் துவங்கியுள்ளன. முதல் பாதியில் மிகப்பெரிய சரிவை கண்ட இந்திய சந்தைகள், பிற்பாதியில் சரிவில் இருந்து ஓரளவு மீண்டன. உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன. உள்ளூரில் எந்த பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காரணத்தையும் கண்டுபிடிக்காத பங்குச்சந்தைகள், உலகளவில் நிகழும் நிகழ்வுகளின் அடிப்படையில் சந்தை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இத்தனை பெரிய சரிவிலும் இந்துஸ்தான் யுனிலிவிர் நிறுவன பங்குகள் 2.61 விழுக்காடு ஏற்றம் கண்டது. பஜாஜ் பின்சர்வ் நிறுவன பங்குகள் 4.33% சரிந்து விழுந்தன.நிஃப்டி உலோகத்துறை பங்குகள் 2.35% சரிந்தன. வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த பங்குச்சந்தைகளால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
விழுந்து சிதறிவிட்ட இந்திய சந்தைகள்
Date: