கச்சா எண்ணெய் விலையில் சமீபத்திய சரிவு, மந்தநிலை அச்சம் உள்ளிட்டவைகளால் எண்ணெய் விலை மேலும் குறையக்கூடும் என்று பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
மேலும் பூரி குறிப்பிடுகையில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $120 என்பது உலகப் பொருளாதாரங்களுக்கு எப்படியும் தாங்க முடியாதது, இதன் விளைவாக பணவீக்கம் மந்தநிலையை ஏற்படுத்துகிறது. இந்தியா தனது தேவைகளில் 85% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவது என்பது பல முக்கிய பொருட்களின் விலைகள் மற்றும் உரங்கள் போன்ற மானிய பொருட்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்று கூறினார்.
ப்ரெண்ட் விலையில் ஏற்படும் வீழ்ச்சி, இந்தியா மற்றும் பிற இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமையலுக்கான எல்பிஜியின் சமீபத்திய விலை உயர்வு குறித்து அமைச்சர் கூறுகையில், இன்னும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.