சேமிப்பில் உலகளவில் தலைசிறந்த நிபுணராக உள்ளவர் வாரன் பஃபெட், இவரின் பெர்க்ஷைர் ஹேத்வே நிறுவனத்தில் பங்காளராக உள்ளவர் சார்லி மங்கர். பெரிய முதலீடுகள் செய்திருந்தாலும் இவர் முரண்பட்ட கருத்துகளால் உலகளவில் பிரபலமானவராக திகழ்கிறார். உலகமே வெவ்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளபோதும், முதலீட்டாளர்களின் முதல் விருப்பம் இப்போதும் சீனாதான் என்று இவர் கூறியுள்ளார். சீனாவை பின்பற்றி அமெரிக்காவும் கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் கிரிப்டோவை பின்பற்றுவோர் முட்டாள்கள் என்றும் தெரிவித்துள்ளார். 99 வயதாகும் சார்லி , இந்த வயதிலும் மிக ஆக்கபூர்வமாக சிந்தித்து தனது கருத்துகளை தெளிவாக முன்வைத்தார். டெய்லி ஜர்னல் என்ற நிறுவனத்துக்கு அவர் 2.15 மணி நேரம் பேட்டி அளித்துள்ளார். அதில் தைவான் மீது சீனா போர்தொடுத்து படைகளை குவிக்க அதிக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தரமான பொருட்களை செய்யும் சீன நிறுவனங்களை மிகக்குறைந்த விலைக்கும் வாங்கி விட முடியும் என்றும் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே சார்லி முன்வைத்துள்ளார். சீனா மற்றும் தைவானில் உள்ள செமிகண்டக்டர் ஆலைகள் உலகிலேயே மிகச்சிறந்தவை என்று புகழ்ந்துள்ள சார்லி, ஆனால் அண்மையில்தான் பிஒய்டி மற்றும் டிஎஸ் எம்சி நிறுவனங்களில் இருந்து பெரிய முதலீடுகளை திரும்பப் பெற்றார் என்பது இன்னொரு ருசிகரமான செய்தியாகும்.
கிரிப்டோ ரசிகர்கள் எல்லாம் முட்டாள்கள் !!!
Date: