இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக நாட்களில் ஏற்றமும், வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் சரிவும் தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில் இந்திய பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சி காணப்பட்டது. மொத்த பங்குகளில் அரை விழுக்காடு சரிவு பதிவாகியுள்ளது.அதாவது வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிந்து 60ஆயிரத்து353 புள்ளிகளாக காணப்பட்டது. இதேபோல் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து17 ஆயிரத்து 992 புள்ளிகளாக காணப்பட்டது. உலகளவில் நிதிசார்ந்த பங்குகள் சரிந்ததாலும், வேலைவாய்ப்பு குறைவின் அச்சம் மற்றும் பணவீக்கத்தின் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவன பங்குகள் 2 விழுக்காடு உயர்ந்துள்ளது. மிகப்பெரிய வீழ்ச்சியாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்குகள் 7.17% விழுந்து நொறுங்கின. தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்குகளும் மந்த கதியிலேயே காணப்பட்டது. நிலையற்ற சூழல் நிலவுவதால் இந்திய பங்குச்சந்தைகளில் சீரற்ற ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.இதனால் முதலீட்டாளர்கள் சற்று யோசனையுடனே பணத்தை வைத்துள்ளனர்.
இந்திய சந்தைகளில் சரிவு..யார் எவ்வளவு இழந்தார்கள் தெரியுமா..!!!
Date: