கோவிட் கொடுமை ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் பேங்க் திவாலாகுற கொடுமை. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்ரேட்டிவ் வங்கி, பிஎம்சி வங்கி, யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கின்னு தொடர்ந்து வங்கிகள் திவாலாகி, நடுத்தர மக்கள் வயித்துல புளியைக் கரைக்க, கொஞ்சமா நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறது இந்தப் பாராளுமன்றக் கூட்டத்தொடர்.
பேங்க் திவாலாயிட்டா ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டுக்குள்ள போற வங்கிகள் “மொராட்டோரியம்” (moratorium) கட்டுப்பாடுகளுக்குள் வந்து, பேங்க்ல டெப்பாசிட் பண்ணவங்க கதி அந்தரத்துல தொங்கும், ரத்தம் சிந்தி உழைக்கிற நடுத்தர வர்க்க மக்கள் “போட்ட பணம் வருமா? வராதான்னு? தவிச்சுக்கிட்டு இருப்பாங்க.
அந்த தவிப்புக்கு இந்த நாடாளுமன்றத் கூட்டத் தொடர்ல ஒரு முடிவு கட்டியிருக்கு அரசு. அதாவது பேங்க்ல பொதுமக்கள் வைக்கிற சேமிப்பு மற்றும் வைப்பு நிதிகளுக்கு Deposit Insurance And Credit Guarantee Corporation – (DICGC) மூலமா ₹1 லட்சம் வரைக்கும் காப்பீடு செய்யப்பட்டு பேங்க் திவாலானாலும் அந்தத் தொகை கிடைக்கிறதுக்கு வழி இருந்தது. இப்ப அந்த ₹1 லட்சம்கிற அளவை ₹5 லட்சமாக அதிகரிச்சு நாடாளுமன்றத்தில திருத்தச் சட்டம் நிறைவேறி இருக்கு. அதுமட்டுமில்லங்க, இந்த காப்பீடு செய்யப்பட்ட (பணம் ₹5 லட்சம் வரை) 90 நாட்களுக்குள்ள உங்க கைக்கு வந்துரும்னு மத்திய அரசு நம்பிக்கை அளிச்சிருக்கு.
₹5 லட்சம் வரைக்கும் வங்கிகள்ல பணம் போடுற நடுத்தர மக்கள் இனி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கோங்க.
Anand sir
You are doing an excellent service. Every individual should be aware of the economic conditions of the society he is living and at global level. Your vedios give a clear picture of these. Thank you.