கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் உலகிலேயே முதல்முறையாக ஒரு அரசாங்கம் சார்பில் டிஜிட்டல் பணம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த போதிலும் மக்கள் மத்தியில் அந்தளவுக்கு இன்னும் சென்று சேரவில்லை. இந்த நிலையில் இந்திய தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா டிஜிட்டல் ரூபாய் குறித்து ருசிகரமான வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ரிசர்வ் வங்கியில் நடந்த கூட்டம் ஒன்றில் தாம் பங்கேற்றுவிட்டு டிஜிட்டல் பணமான இ-ரூபாய் குறித்து தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் அது எப்படி செயல்படும் என்று சந்தேகத்தில் இருந்த போது, ரிசர்வ் வங்கி அருகிலேயே பழ வியாபாரி ஒருவர் டிஜிட்டல் ரூபாயை ஏற்கும் கியுஆர் கோடுகளை வைத்திருந்ததாக கூறியுள்ளார். பழக்கடையை வைத்திருந்தவர் டிஜிட்டல் ரூபாயை ஏற்பதாக கூறியதை அடுத்து அவரிடம் டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்திவிட்டு அவரிடம் இருந்து மாதுளை பழங்களையும் வாங்கி வந்து விட்டதாக ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். யுபிஐ பரிவர்த்தனைகள் எப்படி செயல்படுகிறதோ அதே பாணியில் டிஜிட்டல் ரூபாயும் செயல்படுவதாக ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய நிலையில் அது வணிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்தும் ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது.
டிஜிட்டல் ரூபாய் எப்படி செயல்படும் தெரியுமா? சொல்கிறார் ஆனந்த் மகேந்திரா….
Date: