மாதந்தோறும் ஒரு பெரும்பணக்காரர்கள் சிக்கலில் சிக்கி திணறுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில மாதங்களாக எலான் மஸ்க் ஏடாகூடமான நடவடிக்கைகளில் இறங்கி சிரமப்பட்டு மீண்டு வருகிறார். இந்த சூழலில் உலகில் 3வது பெரும்பணக்காரராக இருந்த கவுதம் அதானி தற்போது உலக கவனத்தை ஈர்த்து வருகிறார். எத்தனை வேகத்தில் மேலே ஏறியதோ அதைவிட பலமடங்கு சரிவு அதுவும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் ஒற்றை வெளியீட்டால் அதானி குழுமம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 27ம் தேதி தொடர் பங்கு வெளியீட்டை தொடங்கிய அதானி குழுமத்தின் பங்குகளை மக்கள் முதலில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கடைசி நாளில் நூறு விழுக்காட்டை கடந்து 112விழுக்காடு வாங்க ஆர்வம் காட்டப்பட்டது.ஆனால் பங்குச்சந்தையில் நிலவும் நிலையற்ற சூழலை கருத்தில் கொண்டு தொடர் பங்கு வெளியீட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இது உலகளவில் முதலீட்டாளர்களை அதிர்சசியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் பிரபல நிறுவனமான இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் 3 ஆயிரத்து 260 கோடி ரூபாயை முதலீடாக செய்திருந்தது. இதனை அதானி குழுமம் ஒரு பைசா பாக்கி இல்லாமல் திரும்ப அளித்துள்ளது. முதலீட்டாளர்கள் நலன்கருதியே தொடர் பங்குகளை வெளியிடும் முயற்சியை கைவிடுவதாக அதானி விளக்கம் தெரிவித்துள்ளார். படிப்படியாக 20 ஆயிரம் கோடி ரூபாயை யாரிடம் இருந்து அதானி குழுமம் பெற்றதோ அவர்களுக்கே பணத்தை திரும்ப அளிக்கவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
முதலீட்டு பணத்தை திரும்பத் தந்தார் அதானி எவ்வளவு தெரியுமா?
Date: