இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு கச்சா எண்ணெய் தரம்பிரிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதாவது டீசலுக்கு லிட்டருக்கு 4 ரூபாய் வரை இழப்பு தொடர்வதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும் இந்தியாவில் கச்சா எண்ணெயை பிரித்து டீசலாகவும்,பெட்ரோலாகவும் அளிப்பதால் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பை சந்திக்கின்றன. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியது முதல் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்த 3 நிறுவனங்கள் சந்தித்த இழப்பில் இருந்தே இன்னும் மீண்டுவரவில்லை என்று தெரிவித்தார். ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மட்டும் இந்த நிறுவனங்களுக்கு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டதாக சுட்டிக்காட்டினார். இழப்பை சந்தித்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடந்த மாதம்தான் மத்திய அரசு 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்தது. 3 நிறுவனங்களுக்கும் பொதுவாக 28 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில் நிவாரணமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் தான் அளிக்க முடிந்தது என்றார். ஜூன் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் 116 டாலர்களாக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 92.25 டாலராக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு லிட்டர் டீசல் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா?
Date: