தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புபவரா நீங்கள்,அப்படியெனில் உங்களுக்கான நேரம் இது. வரும் திங்கட்கிழமை முதல் 5நாட்களுக்கு தங்க பத்திரத்தை மக்கள் வாங்கிக்கொள்ள முடியும், ஒரு கிராம் தங்கப்பத்திரம் 5 ஆயிரத்து 611 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை இந்த கடன் பத்திரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியே இதனை நேரடியாக விற்பதால் எந்தவித அச்சமும் இன்றி மக்கள் வாங்கிக்கொள்ள முடியும். ஆன்லைனில் இந்த தங்கப்பத்திரத்தை வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. அதாவது ஆன்லைனில் ஒருவர் ஒரு கிராம் தங்கப்பத்திரம் வாங்கினால் அவர்கள் 5ஆயிரத்து 561 ரூபாய் செலுத்தினால் போதுமானது. போஸ்ட் ஆபிசில் கூட நீங்கள் இதை வாங்கிக்கொள்ள முடியும். 8 ஆண்டுகளுக்கு இந்த தங்கப்பத்திரத்தில் மக்கள் சேமித்து வைக்க முடியும் கடந்த 2015ம் ஆண்டு மக்களின் சேமிப்பில் மாற்றத்தை கொண்டுவந்த மத்திய அரசின் தங்கப்பத்திர திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு கிராம் முதல் தங்கத்தை மக்கள் வாங்கிக்கொள்ளலாம். ஒரு தனிநபர் அதிகபட்சம் 4 கிலோ தங்கம் வரை வாங்கிக்கொள்ள முடியும். தங்கம் வாங்க கேட்கப்படும் அதே ஆவணங்களை இங்கு அளித்தால் போதுமானது.
தங்க பத்திரம் பத்தி தெரியுமா? எவ்வளவு தெரியுமா விலை?
Date: