கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா விமான நிலையத்தை கனடா நாட்டு fairfax ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தின் பெயரில் ஐபிஓ எனப்படும் ஆரம்ப பொது வெளியீடு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. முதல்கட்டமாக 30 முதல் 40 பில்லியன் ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பையில் இருந்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது 75 %முதன்மை பங்குகளாகவும்,மீதமுள்ளவை ஏற்கனவே உள்ள பங்குகளாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது இந்த பங்குகள் வெளியிடப்படும், ஒரு பங்கின் விலை எவ்வளவு என்ற தகவல் இதுவரை
வெளியாக வில்லை. கர்நாடக சர்வதேச விமான நிலையமானது ஆண்டுக்கு 25 கோடி பேர் பயன்படுத்தும் விமான நிலையமாக உள்ளது. பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 61 உள்நாட்டு விமான சேவைகளும், 14 வெளிநாட்டு விமான சேவைகளும் அளிக்கப்படுகின்றன. பெயில் எனப்படும் பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் 54% பங்குகளை Fairfaxநிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் விமான நிலையம் விலை என்ன தெரியுமா???
Date: