ஐபோன் என்ற புரட்சிகரமான செல்போன்களை அறிமுகப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் கவனம் ஈர்த்து வரும்
இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன்களுக்கு இன்றளவும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்த Birkenstock Arizona sandals வகை செருப்பு தற்போது ஏலத்துக்கு வருகிறது. இந்த செருப்பை அவர் 1970 முதல் 1980 வரை ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்தி வந்தார்..இன்றளவும் கால்தடம்பதிந்த அடையாளங்கள் உள்ளன. மிகவும் எளிமையாக இருந்த ஸ்டீவ் ஜாப்சின் செருப்பை ஏலத்தில் எடுக்க மக்கள் முன் வருகின்றனர். முதல்கட்டமாக 22 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்கள்களை இந்த காலணி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 80 ஆயிரம் டாலர் வரை விலை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த காலணி குறித்து பேசிய முதல் மனைவி லீசா, ஸ்டீவ் மிகவும் எளிமையானவர் என்பதற்கு இந்த செருப்பே சாட்சி என்றார். கடந்த 2007ம் ஆண்டு முதன்முறையாக ஐபோனை அறிமுகப்படுத்திய போது அதற்கு கிடைத்த வரவேற்பு உலகத்தையே வியக்க வைத்தது. அண்மையில் ஸ்டீவ் ஜாப்ஸ் விற்ற முதல் போன் இந்திய ரூபாயில் 32 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த வரிசையில் ஸ்டீவ் பயன்படுத்திய செருப்பு மிகப்பெரிய விலைக்கு ஏலம் போகும் என ஏல நிறுவனம் தெரிவிக்கிறது.
ஒரு ஜோடி செருப்பு இவ்வளவு விலையா?
Date: