கல்யாணத்துக்கு படம் பிடிப்பதில் இருந்து, குற்றசம்பவங்களை தடுக்கும் பிரிவில் என பலதரப்பிலும் டிரோன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் டிரோனாச்சார்யா ஏரியல் இன்னோவேஷன் என்ற நிறுவனம் ஐபிஓவை இந்திய பங்குச்சந்தைகளில் அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து அறிவிப்பு வெளியான அடுத்த 4மணிநேரத்தில் இந்த துறை பங்குகள் 6 மடங்கு அதிகம் மக்களால் விரும்பி வாங்கப்பட்டுள்ளது. அதாவது அதிகம் இந்த துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 65 ரூபாயாக இருந்தது. இந்த பங்கின் அடிப்படை விலையாக 52 ரூபாயாக இருந்தது. மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த நிறுவனத்தின் டிரோன் சேவை புவி அளவீடு,விவசாயத்துறை,புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட அம்சங்களுக்கு பயன்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 180 டிரோன் பைலட்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிரோன்களை தயாரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
டிரோனாச்சார்யா ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு!!!
Date: