நாட்டின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் அண்மையில் புதிய டிவிட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதன்படி, நாட்டின் நிதியமைச்சர், நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எதிர்ப்பார்த்து உள்ளதாகவும், ஆனால் அவரின் ஆசையை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 16.2%வளர்ச்சி இருக்கும் என்றும், முறையே இரண்டு, 3மற்றும் கடைசி காலாண்டுகளில் 6.2,4.1மற்றும் 4.0ஆக இருக்கும் என கணித்து உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
அதாவது நான்கு காலாண்டுகளையும் சேர்த்து சராசரியாக 7புள்ளி 5%வளர்ச்சி தான் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், மற்றொரு பதிவில்,
முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 13.5%மட்டுமே கிடைத்துள்ளது எனவும், இது ரிசர்வ் வங்கி மதிப்பிட்டதை விட குறைவு என்றும் கூறியுள்ளார். அடுத்த 3 கா லாண்டுகளில் பொருளாதாரம் எப்படி இருக்குமோ யாருக்கு தெரியும் என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
2022-23நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி என்பது கனவாகவே இருக்கும் என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டு உள்ளார்.