உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் தொடர்கிறது. நோய் மட்டும் இன்றி பொருளாதார பாதிப்பில் இருந்தும் உலகம் இன்னும் மீளவில்லை என்றே கூற வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணித்ததை விட ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் குறைவான அளவே உள்ளது. அடுத்த காலாண்டுகளின் அளவும் 4-5% மட்டுமே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் 2023-2024ம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக இருக்குமென நம்பப் படுகிறது.
2019-2024 வரையிலான கால கட்டத்தில் நாட்டின் மொத்த வளர்ச்சி வெறும் 3.6% ஆகவே உள்ளது. இந்த அளவு 1970 க்களுக்கு பிறகு உள்ள 5 ஆண்டு சராசரி வளர்ச்சி என்று கவனிக்கத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே கொரோனாவால் பாதிப்பை சந்தித்து உள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் போர், இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதித்து உள்ளன. சீனாவின் முதல் காலாண்டில் வளர்ச்சி 0.4% மட்டுமே இருக்கிறது. இந்த 3 நாடுகளின் பொருளாதாரம் உலகளவில் 3இல் 2 பங்காகும். இந்த சூழலில், இந்திய பொருளாதார வளர்ச்சி மட்டும் வளர்ந்து வருகிறது. எனினும் இந்தியாவிலும் உலகத்தின் தாக்கம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. எது எப்படியோ உலக சராசரி பொருளாதார வளர்ச்சியை விட இந்தியா சிறப்பாகவே செய்து வருகிறது. 7% வளர்ச்சி வரவில்லை என்றாலும் இந்தியாவில் 6% வளர்ச்சி என்பதே பெரிய விஷயம்தான்..