உலக பெரும்பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், கார்கள், விண்வெளி நிறுவனங்களை நிர்வகிப்பது மட்டுமில்லாமல் தற்போது புதிய சென்ட் நிறுவனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
Burnt hair என்ற பெயரில் விற்கப்படும் சென்ட் சிலமணி நேரத்தில் பல லட்சம் பாட்டில்கள் விற்றுத்தீர்ந்து விட்டன. டிவிட்டரை வாங்குவாரா மாட்டாரா என உலகமே எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்கும் நிலையில், சென்ட் வியாபாரியான மஸ்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்த பெர்பீயூமை வாங்குங்கள் அதில் கிடைக்கும் வருவாயை வைத்து நான் டிவிட்டரை வாங்க இருக்கிறேன் என்று அவர் பதிவிட்டதை சுட்டிக்காட்டிய இணையவாசிகள்
உங்கள் நிறுவனத்தில் எனக்கு வேலை கொடுங்கள் நாங்கள் உங்கள் நிறுவனத்தையே வாங்கி விடுகிறோம் என மஸ்கிற்கே டஃப் தருகின்றனர்.
அவர் விற்கும் ஒரு பாட்டில் பெர்ஃபியூமின் இந்திய விலை 8 ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது.
டிவிட்டரை வாங்க சட்டப்போராட்டம் வரை நடத்திப்பார்த்த எலான் மஸ்க் கடைசியில் செண்ட் விற்க களமிறங்கியதை பலரும் கேலி செய்தாலும், அவர் எப்போதும் வணிகத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார் என்கின்றனர் வல்லுநர்கள்.
டிவிட்டரை வாங்க perfume விற்கும் எலான் மஸ்க்…
Date: