உலகளவில் பிரபலமான சமூக வலைதள நிறுவனமாக உள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை ரஷ்யா கடந்த மார்ச்ச மாதம் தடை செய்தது. பயங்கரவாத பட்டியலில் மெட்டா நிறுவனத்தை சேர்த்துள்ள ரஷ்யாவின் செயல் அதிரச்சி அளிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு முகமையான ராஸ்பின் மானிட்டரிங் இந்த செயலை உலக நாடுகள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
குறிப்பிட்ட இந்த அமைப்பு தாலிபானையும் மெட்டாவையும் ஒரே மதிப்பீட்டில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்ற வைத்துள்ளது.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் ரஷ்யாவை உலகின் பல நாடுகளும் ஒதுக்கி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனமான மெட்டா தனது பெரிய வணிக இழப்பை ரஷ்யாவில் சந்தித்துள்ளது.
ரஷ்ய அரசு பேஸ்புக்கையும்,இன்ஸ்டாகிராமையும் தடைசெய்து இருந்தாலும், விபிஎன் எனப்படும் நுட்பம் மூலம் பல தரப்பினரும் இன்றும் ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.
வருவாய் ஆதாரத்தில் முக்கியமாக இருந்த ரஷ்யாவில் இருந்து திடீரென பயனர்கள் குறைந்த நிலையில் மெட்டா நிறுவனம் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.