சாம்சங்க் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள மடிக்கும் வகையிலான செல்போன்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இந்த வகை போன்களை தயாரிப்பதாக தகவல் கசிந்தது.
ஆனால் தற்போது புதிய தகவலாக மடிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை தயாரிப்பது உண்மைதான்,
ஆனால் அவை போனில் இல்லை மாறாக ஐபேட்களில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மடிக்கும் வகையிலான ஐபோன்களில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
முதலாவதாக அதிக விலை இருக்கும், இந்தியாவில் இந்த வகை போன்கள் வரும்பட்சத்தில் குறைந்தது 2 லட்சம்
ரூபாயாக இருக்கும். இதனை சமாளிக்கும் வகையில் மடிக்கும் வகை ஐபேட்களை அந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. மடிக்கும் ஐபேட்கள் 20 இன்ச் அளவில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 2025ம் ஆண்டுக்குள் ஒரே சிப்பில் இயங்கும் வகையில் போன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்து உள்ளது.
விரைவில் வருகிறதா மடிக்கும் வகையிலான ஐபோன்கள்???
Date: