டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்டரி, மும்பையில் ஒரு கார் விபத்தில் இன்று மாலை காலமானார். இன்று அகமதாபாத்திலிருந்து மும்பை வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில், அவர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா சயின்ஸ் நிறுவனத்தின் உடைய தலைவராக இருந்த பொழுது ரத்தன் டாட்டா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் வெளியான செய்திகளின்படி, அவர் வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் முக்கியமாக டாடா நானோ கார் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்று சைரஸ் மிஸ்டரி கூறியதாகவும், அதற்கு ரத்தன் டாடா மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தன்னை வெளியேற்றியது சட்டபூர்வமாக சரியில்லை என்று சைரஸ் மிஸ்திரி தரப்பில் இருந்து வழக்குகளும் தொடரப்பட்டன. வழக்குகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோது 2016 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் குடும்பத்தின் உடைய போர்டு உறுப்பினர்கள் சைரஸ் மிஸ்டரியை ஒருமனதாக தலைவர் பதவியில் இருந்து நீக்கினர். அதன் பின்னரே தற்போது தலைவராக இருக்கக்கூடிய சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி ஏற்று கொண்டார்.
2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை டாட்டா குடும்பத்தின் உடைய தலைவராக சைரஸ் மிஸ்டரி பதவியேற்றுந்தது குறிப்பிடத்தக்கது.