ஃபியூச்சர் குழுமம் தங்களது கடனைசெலுத்தக் கடைசி தேதியான மார்ச் 31ந் தேதியன்று கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டன.
ஃபியூச்சர் ரீடெய்ல் (ரூ. 5,322.32 கோடி) மற்றும் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் (ரூ. 2,835.65 கோடி) செலுத்துவதற்கான நிலுவைத் தேதி 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, அமேசானுடன் நடந்து வரும் வழக்குகள் மற்றும் பிற தொடர்புடைய சிக்கல்கள் காரணமாக கடன் வழங்குபவர்களுக்கு ரூ. 5,322.32 கோடியை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை தவறவிட்டதாக Future Retail Limited தெரிவித்துள்ளது.
ஃபியூச்சர் குழுமத்தால் அறிவிக்கப்பட்ட சில்லறை, மொத்த விற்பனை, தளவாடங்கள் மற்றும் கிடங்குப் பிரிவுகளில் செயல்படும் 19 நிறுவனங்களை ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) க்கு விற்க உள்ளது. இதன் முதல்கட்டமாக அனைத்து 19 நிறுவனங்களும் ஒரு நிறுவனமாக ஒருங்கிணைக்கப்படும். அதன்பின்னர் FEL, RRVL-க்கு மாற்றப்படும்.
அமேசான் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார அழுத்தங்கள் காரணமாக Future Retail Limited, செயல்படாத சொத்தாக மாறியதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.