பொருளாதார அழுத்தங்கள் காரணமாக Future Retail Limited, செயல்படாத சொத்தாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்காவை சேர்ந்த அமேசானுடன் சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள Future Retail Limited நடப்பு காலாண்டில் ஏற்கனவே செயல்படாத சொத்தாக மாறியுள்ளது.
பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் Future Retail Ltd, சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை என்று மூத்த வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒருமுறை மறுசீரமைப்பு திட்டத்தில் உள்ள ஏற்பாட்டின்படி, அவர்களுக்கு 30 நாள் க்யூரேஷன் காலம் உள்ளது. இந்த காலகட்டத்தில் நிறுவனங்கள் பணம் செலுத்த முடியாமல் போனால் மட்டுமே அவை மோசமான கடன் வகைக்குள் சென்று விடும் என்று வங்கியாளர்கள் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் குழு ஒப்பந்தம் நிறைவேற இன்னும் நம்பிக்கை இருப்பதாகவும், கடன் வழங்குபவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் குறித்து சில உறுதிப்படுத்தல்களைப் பெற முயற்சிப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இது பலனளித்தால், திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.