ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதிக் கடன் வழங்கிய 33 வங்கிகள் NCLT ல் ₹21,058 கோடி கடன்தொகைக்கு உரிமைகோரல்களைச் சமர்ப்பித்துள்ளனர்,
நியூயார்க் மெலோன் வங்கி, ₹4,670 கோடி, பேங்க் ஆப் பரோடா ₹2,286 கோடி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ₹2,002 கோடி, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ₹1,657 கோடி என மிகப்பெரிய தொகைக்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.
தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) மும்பை பெஞ்ச், ஜூன் 20 அன்று, கடனில் சிக்கித் தவிக்கும் கிஷோர் பியானியின் நிறுவனமான ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் மீது திவால் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது.