உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள இந்த சூழலில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ் யா மீது பொருளாதார தடை விதித்த சூழலில் ரஷிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக சரிந்து கிடக்கிறது. இந்த நிலையில் 7நாடுகள் குழுவான ஜி 7நாடுகளின் நிதி அமைச்சர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை ந டத்தினர்.
இதன்படி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி கொள் முடிவு செய்யப்பட்டது. 7நாடுகளும் இணைந்து ரஷிய கச்சா எண்ணெய் குறிப்பிட்ட தொகைக்கு மேல் விற்க கூடாது என முடிவு செய்துள்ளனர். எனினும் எவ்வளவு மதிப்புக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விற்க வேண்டும் என்ற முடிவுக்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் சீனா மற்றும் இந்தியாவின் கருத்தை ஜி7கேட்டு இருக்கலாம் என்றும் ஜி 7நாடுகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.