ப்ளூம் பெர்க் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆசியாவில் இருந்து ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த மாதம் 4 ம் இடத்தில் இருந்த கவுதம் அதானி, பிரான்ஸ் நாட்டின் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னார்டு வை இந்த மாதம் அதானி முந்தியுள்ளார். கவுதம் அதானி யின் சொத்து மதிப்பு 137பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெஸாஸ் ஆகியோர் உள்ளனர். நடப்பாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 60.9பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
இந்தாண்டில் எந்த ஒரு தொழிலதிபருக்கு ம் இல்லாத வகையில் கவுதம் அதானியின் சொத்து 5மடங்கு உயர்ந்துள்ளது. உலகில் தொண்டு அமைப்புக்களுக்கு பணம் ஒதுக்கியுள்ள அதிபர்களின் பட்டியலில் வாரன் பபட் 35 பில்லியன் டாலரை அளித்து இருக்கிறார். இதேபோல் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 20பில்லியன் மற்றும் அதானி 7.7பில்லியன் டாலர் அளித்துள்ளனர். 60வயதாகும் அதானியின் வளர்ச்சி உலக பணக்காரர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது