டெல்லியைச் சேர்ந்த பிரீத்தம் பால் என்பவர் தனது கனவு காரான பிஎம்டபிள்யூ காரை கடந்த 2015-ல் வாங்கியிருக்கிறார். வாங்கிய 5 மாதங்களில் காரின் பிரேக்கை அழுத்தினால் வித்தியாசமான சப்தம் வந்துள்ளது. இது பற்றி பல முறை புகார் அளித்த பிரீத்தம், உடனடியாக அதனை சரி செய்ய அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யு பழுது நீக்ககத்தில் காரை விட்டார். வாடிக்கையாளர் புகாரை சரி செய்ய 10 நாட்கள் எடுத்துக் கொண்டபோதும் பழுது சரியானபாடாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பான பிரீத்தம், டெல்லியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த கார் குறித்த வழக்கு 6 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில் சரியாக உற்பத்தி செய்யாத பிஎம்டபிள்யு காரை வாங்கியவருக்கு முழு பணத்தையும்,வட்டியையும்,அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்ககான தொகையையும் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான காராக அறியப்பட்ட பிஎம்டபிள்யு எப்படி இத்தனை பெரிய பிரச்னையை சாதாரணமாக கடந்து சென்றது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளதுடன், இந்த வழக்கு டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பணத்தை திருப்பி கொடுங்கள்!!! BMWவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்!!!
Date: