2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று நோய் தாக்குதலால் குறைந்திருந்த தங்கத்தின் தேவை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது, செப்டம்பர் 2001 காலாண்டின் முடிவில் இந்தியாவில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 47 சதவீதம் உயர்ந்து 139 டன்னாக இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் 94.6 டன்களுடன் மற்றும் தொற்று நோய்க்கு முந்தைய செப்டம்பர் 2019 காலாண்டில் பதிவான 123.9 டன்களை விட இது அதிகமாகும் என்று உலக தங்க கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 2009 முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்க நகைகளின் தேவை 58% ஏற்றம் பெற்று 96.2 டன்களாக உயர்ந்தது. கூடிவரும் தங்கத்தின் தேவை, பரிசு மற்றும் பொருளாதார மீட்சி உள்ளிட்ட காரணங்களால் பார் மற்றும் முதலீட்டு தேவையும் இந்த காலகட்டத்தில் 27 சதவீதம் அதிகரித்து 43 டன்னாக இருந்தது, உலக தங்க கவுன்சில் அறிக்கைப்படி இந்தியாவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் தங்கத்தை முதலீடாக வாங்குகிறார்கள் பணவீக்கத்தின் ஒவ்வொரு ஒரு சதவீதப் புள்ளி அதிகரிப்புக்கு இணையான தங்கத்தின் தேவை 2.6 சதவீதம் உயர்ந்துள்ளது
கோவிட் இரண்டாவது அலைக்குப் பிறகு பெரும்பாலான இந்திய மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கும் என்று உலக தங்க கவுன்சில் அறிக்கை கூறுகிறது, வரவிருக்கும் பண்டிகைகள், திருமண சீசன் போன்றவற்றினால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது உலக தங்க கவுன்சில்.
உலக அளவில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 7% மற்றும் காலாண்டில் 13 சதவீதம் குறைந்து 831 டன்களாக உள்ளது. தங்கத்தின் விலை காலாண்டில் சராசரியாக ஒரு அவுன்ஸ் 1790 டாலர்களாக இருக்கிறது. இது கடந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 1908 டாலர்களாக இதுவரை இல்லாத அளவில் இருந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.