2022 வருடத்தின் தங்கப் பத்திரங்கள் (SGBs) முதல் வெளியீடு திங்கள்கிழமை திறக்கப்பட்டது. சவரன் தங்கப் பத்திரங்கள் (SGB ) திட்டம் 2021-22- ஜனவரி 14 வரை சந்தாவிற்கு திறந்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, பத்திரத்தின் பெயரளவு மதிப்பு ₹4,786 (ஒரு யூனிட் சவரன் தங்கம் 1 கிராம் தங்கத்திற்கு சமம்) என வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ₹50 தள்ளுபடி வழங்க இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளன. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ₹32,000 கோடிக்கு மேல் திரட்ட முடிந்ததால் இந்தத் திட்டம் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தற்போது, தங்கத்தின் விலை இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சுமார் ₹47,300 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. மேலும் 2020-ம் ஆண்டில் அதன் உச்சத்தை விட கிட்டத்தட்ட ₹9,000 குறைந்துள்ளது. முன்னர் மதிப்பிடப்பட்டதை விட முதலீட்டாளர்கள் பத்திரங்கள் வாங்குவதில் குறைந்து போயினர். நேர்மறையான நீண்ட காலக் கண்ணோட்டம் இருந்தபோதிலும், இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் தங்கப் பத்திரங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். தங்கத்தை வாங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு SGB ஒரு திறமையான வழி என்று நிபுணர்கள் நம்புகின்றனர். “தங்கத்தை வாங்குவது போல் சேமிப்பு செலவு மற்றும் வரிகள் எதுவும் இல்லை. காகிதத் தங்கம் அதிக ரிடெம்ப்ஷன் மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு எதிராக கடன் வாங்க எளிதாகப் பயன்படுத்தலாம். அதன் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகையுடன் வருகிறது” என்று முதலீட்டு ஆலோசனை நிறுவனமான மில்வுட் கேன் இன்டர்நேஷனல் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிஷ் பட் கூறினார்.
“தற்போதைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில், வெளியீட்டு விலை அதிகமாக உள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், எனவே இப்போது SGB களில் காத்திருப்பது நல்லது” என்று IIFL செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் அனுஜ் குப்தா கூறினார். நிதி ஆலோசகர்களின் கூற்றுப்படி, தங்கம் ஒரு நல்ல பல்வகைப்படுத்தும் பொருளாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் இந்தச் சொத்து வகுப்பில் அதிகமாகச் செல்லக்கூடாது. தங்கப் பத்திரங்களின் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகள். எனவே, நீங்கள் தங்கப் பத்திரங்களை வாங்கி முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் பட்சத்தில், மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும். ஐந்தாவது ஆண்டிலிருந்து முன்கூட்டியே திரும்பப் பெறுவதும் சாத்தியமாகும்.