தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் ( 29-ஆகஸ்ட் -22)ஒரு கிராம் 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், சர்வதேச காரணிகளின் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இதன் காரணமாக, 4 ஆயிரத்து 765 ரூபாய் என்று இருந்த ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 790 ரூபாய் வரை அதிகரித்து, பின்னர் குறைந்த தொடங்கியது.
இந்நிலையில், வார இறுதியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 722 ரூபாய் என்ற நிலையில் உள்ளது. அதே போல் 24 கேரட் தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்கத்தில் ( 29-ஆகஸ்ட் -22) 5 ஆயிரத்து 167 ரூபாய் என்ற நிலையில் இருந்து வார இறுதியில், 5 ஆயிரத்து 124 ரூபாய் என்ற நிலையில் உள்ளது. இது இனி வரும் காலங்களிலும் ஏற்ற இறக்கங்களை சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை இனி வரும் காலங்களிலும் குறையவே வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதே போல் வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கிலோ வெள்ளியின் விலை சுமார் 2 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. அதாவது, ஒரே வாரத்தில், ஒரு கிராம் 2 ரூபாய் வரை குறைந்திருக்கிறது.