நாட்டின் பெட்ரோல் வருங்கால தேவை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவுக்கு அடுத்தாண்டு பெட்ரோலிய பொருட்கள் தேவை இருக்கும் என சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு தேவை குறித்தும் ஆராய திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடைபெறாமல் தடைபட் டு உள்ள கச்சா எண்ணெய் கிணறுகள் குறித்தும் ஆராய பணிகள் நடைபெற்று வருகிறது . உலகிலேயே எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் பெரிய நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா தான் 4 ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது