இந்தியாவின் பிரபல செல்போன் நெட்வொர்க்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணம் 16 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பணத்துக்கு பதிலாக வோடபோன் ஐடியா நிறுவனம் 33 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்தது. இதற்காக கடந்த ஜூலையில் பணிகள் நடந்தன. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 1 லட்சத்து 99 ஆயிரத்து 80 கோடி ரூபாயாக உள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை விற்று அதன் மூலம், உடனடியாக செலுத்த வேண்டிய 16 ஆயிரம் கோடி கடனை அடைக்கும் திட்டத்திற்கும் பிரச்னை எழுந்தது. ஒரு பங்கின் விலை 9 ரூபாய்க்கும் கீழ் இருந்தால் அதனை விற்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை ஒரு பங்கின் விலை 9 ரூபாய் 69 காசுகளாக உள்ளது.
10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை உயர்ந்ததும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 33 விழுக்காடு பங்குகளை அரசு கையகப்படுத்தி அதனை பங்குச்சந்தையில் அரசு விற்க முடியும்.
விரைவில் இந்த விலை 10 ரூபாயை எட்டியதும் வோடபோன் ஐடியா பங்குகளை அரசு விற்க உள்ளது குறிப்பிடத்தக்கது..
வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை அரசு எடுத்துக்கொள்கிறதா?
Date: